அரியர்ஸ் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக அண்ணா பல்கலை.க்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், அரியர்ஸ் வைத்துள்ள இறுதியாண்டு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற வைப்பது ஏற்க முடியாது.
உத்தரவை மீறினால் அண்ணா பல்கலைகழகம் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.
இதனால், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் உத்தரவு ரத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.